இலவசக் கருவிகள்
எங்கள் கருவியின் மூலம் சிறப்பான சேவை விதிமுறைகளை உருவாக்குங்கள்
உங்கள் இணையதளத்திற்கான பிரத்தியேகச் சேவை விதிமுறைகள் கொள்கை
உங்கள் இணையதளம், நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க, உங்களின் பயன்பாட்டு விதிமுறைகளைத் தெளிவான, எளிமையான, அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் குறிப்பிட வேண்டியது அவசியம். எங்களின் எளிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வார்ப்புருவின் மூலம், உங்கள் தொழிலுக்கான பிரத்தியேகச் சேவை விதிமுறைகள் கொள்கையை உடனடியாக உருவாக்கிக்கொள்ளலாம்.
உங்களுக்கான இலவசச் சேவை விதிமுறைகள் கொள்கை உருவாக்கப்பட்டவுடன், அது உங்களுக்குச் சரியாக அமையும் வரை நீங்கள் அதைத் தொடர்ந்து மாற்றியமைத்து மேம்படுத்திக்கொள்ளலாம். தொடங்க, கீழே உள்ள எளிய படிவத்தை நிரப்புங்கள்.
உங்கள் சேவை விதிமுறைகள் கொள்கையுடன் சேர்த்து Shopify-இன் இலவச சோதனையையும் பெறுங்கள்
இந்த மாதிரி வார்ப்புருக்கள் சட்ட ஆலோசனை அல்ல, இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்:
தனியுரிமைக் கொள்கை
பல நாடுகளில் தனியுரிமைக் கொள்கைகள் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளன, மேலும் அவை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகவும் உள்ளன.
பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
நன்மதிப்பை உருவாக்குங்கள், தாங்கள் செலுத்திய பணத்திற்கான மதிப்பு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்துங்கள்.
FAQ-கள்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்கை (சேவை விதிமுறைகள் அல்லது பயன்பாட்டு விதிமுறைகள் என்றும் அழைக்கப்படும்) என்பது, நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும். வாடிக்கையாளர்கள் உங்கள் சேவையை (இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் உட்பட) பயன்படுத்தினால், அவர்களிடம் சட்டப்படி என்ன எதிர்பார்க்கப்படும் என்பதை இது அவர்களுக்குத் தெரிவிக்கிறது.
தனியுரிமைக் கொள்கையைப் போல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்கை சட்டப்படி கட்டாயமில்லை. இருப்பினும், ஒரு சட்டப்பூர்வப் பிரச்சனை எழும்போது, நீதிமன்றத்தில் ஒரு நிறுவனத்திற்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்கை உதவக்கூடும்.
பொதுவாக இணையதளத்தின் அடிப்பகுதியில் தனியுரிமைக் கொள்கையுடன் சேர்த்து, இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்கைக்கான இணையப்பக்கம் இணைக்கப்பட்டிருக்கும். இணையதளத்தின் அடிப்பகுதி என்பது ஒரு நிலையான வடிவமைப்பாகும், இது இணையதளத்தில் உள்ள அனைத்துப் பக்கங்களிலும் காட்டப்படும்.
Shopify வழங்கும் இந்த இலவசக் கொள்கை உருவாக்கக் கருவியானது, சட்ட வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. எப்படித் தொடங்குவது எனப் பார்ப்போம்:
- உங்கள் மின்னஞ்சல் மற்றும் நிறுவனத் தகவலை உள்ளிடுங்கள்
- உங்கள் பிரத்தியேகக் கொள்கை உங்கள் இன்பாக்ஸுக்கு வரும் வரை காத்திருங்கள்
- வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் உங்கள் கொள்கையை மாற்றியமையுங்கள்
கொள்கைகளை உருவாக்கும் இந்தக் கருவி, வணிகர்களுக்காக Shopify வழங்கும் ஒரு இலவசக் கருவியாகும். அதாவது, இதைப் பயன்படுத்துவதற்கு எந்தச் செலவும் ஆகாது. நாங்கள் தற்போது பின்வரும் கொள்கை உருவாக்கக் கருவிகளை வழங்குகிறோம்:
- தனியுரிமைக் கொள்கை
- பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்